மாரிமுத்து இதை மட்டும் செய்யாமல் இருந்திருந்தா கண்டிப்பா காப்பாத்திருக்கலாம் - டாக்டர் தகவல்!
மாரிமுத்து இறப்பு குறித்து சிகிச்சை அளித்த மருத்துவர் பேசியுள்ளார்.
மாரிமுத்து
சின்னத்திரையில் அனைவரையும் கவர்ந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். பெரியத்திரை அளவுக்கு அதில் நடிக்கும் நடிகர்கள் ஆக்டிங்கில் பயங்கரம். அந்த வகையில், ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்துவின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், டிரெண்டிங் ஸ்டாராக இருந்து வந்தவர் டப்பிங் பணியில் இருந்தபோது ஏற்பட்ட அசெளகரியத்தால் தானே கார் ஓட்டி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால், மாரடைப்பால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இறப்பு
தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஆனந்தகுமார், நெஞ்சுவலி வந்தபோது மாரிமுத்து அவரே தான் காரை ஓட்டிட்டு வந்தாரு. கார் ஓட்டிட்டு வந்த அவரால் காரை விட்டு கீழே இறங்கவே முடியவில்லை. அவருக்கு மூச்சு விடவும் கஷ்டமாக இருந்தது. எல்லா ட்ரீட்மெண்டையும் ஆரம்பிச்சோம். இருந்தாலும் அவரை காப்பாற்ற முடியல.
வாயில நுரை நுரையா வந்து கொண்டு இருந்துச்சு. அவங்க வீட்டுக்கு சொன்னோம். அவங்க ஏற்றுக் கொண்டாங்க. பின்னர் எங்களுடைய ஆம்புலன்ஸ் தான் அவருடைய உடலை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம் மாரிமுத்து தானே கார் ஓட்டிட்டு வராமல் வேறு யாராவது வைத்து கார் ஓட்டிட்டு வந்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம்.
இப்படி நெஞ்சு வலிக்கும் போது ரொம்ப அழுத்தம் கொடுக்கக் கூடாது. இது மாதிரியான டைமில் கார் ஓட்டவோ, நடக்கவோ, வேற ஏதாவது கஷ்டமான வேலைகளையோ பண்ண கூடாது எனத் தெரிவித்துள்ளார்.