பணத்துக்காக இறந்தவர் பற்றி இப்படியா பேசுவது?.. மனசு ரொம்ப வலிக்குது - மாரிமுத்துவின் தம்பி இமோஷனல்!

Bayilvan Ranganathan Tamil Actors G. Marimuthu
By Vinothini Sep 25, 2023 03:30 PM GMT
Report

நடிகர் மாரிமுத்துவின் தம்பி பயில்வான் பேசியது குறித்து ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

மாரிமுத்து

தமிழ் சினிமாவின் இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் நடித்தது மூலம் பிரபலமானார். பட்டி தொட்டி எங்கும் இவரது பேச்சு தான் ஓடிக்கொண்டிருந்தது. சமூக வலைத்தளத்தில் இவரது மீம்ஸ் தான் எங்கும் பறந்தது. இவர் பல படங்களிலும் நடித்துள்ளார், ஆனால் பெரிதாக பேசப்படாத இவர் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமானார்.

marimuthu-brother-emotional-about-bayilwan-speech

இவர் அந்த சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே கிளம்பி மருத்துவமனைக்கு இவரே கார் ஓட்டி சென்றார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டு இருந்த போது உயிரிழந்தார். அவரது திடீர் உயிரிழப்பு ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தம்பி இமோஷனல்

இந்நிலையில், மாரிமுத்து கடைசியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்களிடையே வாக்குவாதம் செய்திருந்தார். இது குறித்து பேசிய பயில்வான், மாரிமுத்து ஜோசியம் உண்மை இல்லை, சாமியே இல்லை என்று சொன்னதால் தான் இறந்து விட்டார் என்று கூறினார்.

marimuthu-brother-emotional-about-bayilwan-speech

இதனால் மாரிமுத்துவின் தம்பி, "அண்ணன் சாமியை எதிர்த்து பேசியதால்தான், சாமி அவரை கொன்றுவிட்டது என்று பயில்வான் பேசி இருக்கிறார். அப்படி எல்லாம் பேசாதீங்க மனசு வலிக்கிறது. நானும் சாமி இல்லை என்றுதான் சொல்கிறேன் சாமி, என்னைக் கொல்லட்டும் அப்போது பயில்வான் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால், இறந்தவர் பற்றி பேசுவது ஒரு நல்ல கலைஞனுக்கு அழகு இல்லை. தன்னுடைய வருமானத்திற்காக பயில்வான் ரங்கநாதன் பேசியது மிகப்பெரிய தவறு. அவருக்கு இந்த கூட்டத்தின் மூலம் எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.