எதுக்கு..? சட்டபூர்வமாகும் கஞ்சா விற்பனை - அதிர்ச்சியில் மக்கள்

Germany Drugs
By Karthick Feb 24, 2024 05:50 AM GMT
Report

கஞ்சா பயன்பாட்டைச் சட்டபூர்வமாக்க அறிவிக்கும் முனைப்பில் இருக்கும் நாடு குறித்த தகவல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 கஞ்சா

போதை பொருளான கஞ்சா பயன்பாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கருத்துக்கள் வலுத்து வரும் சூழலில், பலரும் இந்த போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருவது வழக்கமாக வருகின்றது.

marijuana-to-be-official-in-germay-from-april-11

இந்நிலையில் தான் இந்த கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்க நாடு ஒன்று முயன்று வருகின்றது. மால்டா, லக்ஸம்பெர்க் போன்ற ஐரோப்பிய யூனியனில் இருக்கும் நாடுகளுக்குப் பிறகு கஞ்சா பயன்பாட்டைச் சட்டபூர்வமாக்கவுள்ள மூன்றாவது நாடாக ஜெர்மனி வரவுள்ளது.

சட்டப்பூரவமாகிறது

அந்நாட்டின் புதிய சட்டத்தின்படி, ஜெர்மனியில் தனிநபர் பொதுவெளியில் 25 கிராம் அளவுக்கும் வீட்டில் 50 கிராம் அளவுக்கும் கஞ்சாவை வைத்துக் கொள்ளவும் என்றும் வீடுகளில் மூன்று செடிகள் வரை வளர்க்கவும் அனுமதிக்கப்படுவது போன்ற சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

marijuana-to-be-official-in-germay-from-april-11

ஜெர்மனி நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரான கார்ல் லாட்டர்பாக், ஜெர்மானி நாட்டில் இருக்கும் 70 லட்சம் பேர் தொடந்த்து எடுத்துக்கொள்ளும் இந்த போதை பொருளை வெளிப்படையான சந்தைக்கு கொண்டுவரும் சட்டம் இது என தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனமான கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

என் பொண்ணு சாகல ..உயிரோடு தான் இருக்கா!! நிர்வாணப்படுத்தப்பட்ட ஜெர்மன் பெண் குறித்து தாயார் கதறல்!!

என் பொண்ணு சாகல ..உயிரோடு தான் இருக்கா!! நிர்வாணப்படுத்தப்பட்ட ஜெர்மன் பெண் குறித்து தாயார் கதறல்!!

ஆனால், இந்த கஞ்சா பயன்பாடு மருத்துவ பயன்பாட்டிற்காக மறுபடுத்தப்பட்டு சந்தைக்கு வரும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கஞ்சா பயன்பாட்டுக்குத் தடை நீடிக்கிறது. ஏப்ரல் 1 முதல் கஞ்சாவை வைத்துக் கொள்ளவும் வளர்க்கவும் அனுமதி அமலாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.