என் பொண்ணு சாகல ..உயிரோடு தான் இருக்கா!! நிர்வாணப்படுத்தப்பட்ட ஜெர்மன் பெண் குறித்து தாயார் கதறல்!!

Germany Israel-Hamas War
By Karthick Oct 11, 2023 06:00 AM GMT
Report

ஹமாஸ் படையினரால் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட்ட ஜெர்மன் நாட்டு இளம்பெண் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கது.

ஜெர்மனி பெண்

கடந்த சனிக்கிழமை காசா மற்றும் இஸ்ரேல் எல்லையை ஒட்டிய கிராமப்புற பண்ணை நிலத்தில் நோவா திருவிழா நடந்துள்ளது. அமைதி வேண்டி நடத்தப்பட்ட அந்த இசை திருவிழாவில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஷானி லௌக்(Shani Louk) என்ற 22 வயது இளம்பெண் அவரின் தோழியுடன் பங்கேற்றுள்ளார்.

german-girl-stripped-naked-by-hamas-is-alive

அவர்கள் உணவு உண்டு, நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போது திடீரென ஹமாஸ் பயங்கரவாதிகள் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதல் நடந்தபோது, அந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நாலாபுறமும் ஒட்டியுள்ளனர்.

கொடூர செயல்

சில மணி நேரங்களில் இளம் பெண் ஒருவரை நிர்வாண கோலத்தில் ஜீப்பில் எடுத்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த பெண் இஸ்ரேல் ராணுவத்தின் வீராங்கனை என பயங்கரவாதிகள் கூறினர். ஆனால் அந்த இளம்பெண் ஷானி லௌக் என்பது பிறகு தெரியவந்துள்ளது. அந்த பெண்ணின் உறவினர் தொமசினா லௌக்கும், சகோதரியான அதி லௌக்கும் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஷானி லௌக் பச்சை குத்தும் கலைஞராக இருந்து வந்துள்ளார். அதற்கிடையில், தனது மகளின் உடலை தந்து விடக் கோரி, ஷானி லௌக்கின் தாயார் கையில் மகளின் புகைப்படத்தோடு உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டது பெரும் வைரலானது.

german-girl-stripped-naked-by-hamas-is-alive

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அண்மையில் போராளிகளால் நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்ட ஷானி லௌக்கின் தாய், தனது மகள் உயிருடன் இருப்பதாக நம்புவதாக ஜெர்மன்செய்தி நிறுவனமான Der Spiegel தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.