உதயநிதியுடன் ஆய்வு..! எழுந்த விமர்சனங்கள் - ஒரே பதிவில் முடித்துவைத்த மாரி செல்வராஜ்..!!
வெள்ள பாதித்த பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, இயக்குனர் மாரி செல்வராஜும் உடன் சென்றிருந்த படங்கள் வெளியான நிலையில், அண்ணாமலை அதனை விமர்சித்திருந்தார்.
உதயநிதியுடன் மாரி செல்வராஜ்
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற தென்தமிழகம் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், மீட்புப்பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் ஆய்வினை மேற்கொண்டார்.
அப்போது அவருடன் இயக்குனர் மாரி செல்வராஜும் உடனிருந்தார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார்.
மாரி செல்வராஜ் பதிலடி
அது குறித்து அண்ணாமலை பேசும் போது, உதயநிதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை பின்னால் நடக்கவிட்டு, சினிமா இயக்குநர் மாரி செல்வராஜுடன் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் என்று கூறி உதயநிதி இதற்கெல்லாம் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆக்ஷன் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் போல என சாடியிருந்தார்.
இதற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல …நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.