இதுக்கு கூட உதயநிதிக்கு ஆக்ஷன் - கட் சொல்லணும் போல - அண்ணாமலை விமர்சனம்..!
இயக்குனர் மாரிசெல்வராஜை அருகில் வைத்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டது வருத்தமளிக்குறது என்று அண்ணாமலை தெரிவித்தார்.
அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு
வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களை பார்வையிட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்ற நிலையில், மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென்தமிழகம் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக முதல்வர் டெல்லி பயணம் செய்துள்ளார் என்று விமர்சித்தார்.
முதல்வருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகளையும் அவர் அழைத்துச் சென்றுள்ளதாக சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இச்செயல் தென் மாவட்ட மக்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
மாரி செல்வராஜ் எதற்கு
தொடர்ந்து பேசிய அவர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் போன்ற அனுபவமுள்ளவர்களை ஆய்வுக்கு அனுப்பாமல் அனுபவமில்லாத உதயநிதியை தமிழக முதல்வர் அனுப்பியுள்ளார் என்று குற்றம்சாட்டி,
உதயநிதியோ நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை பின்னால் நடக்கவிட்டு, சினிமா இயக்குநர் மாரி செல்வராஜுடன் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் என்றும் விமர்சித்தார்.
உதயநிதி இதற்கெல்லாம் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆக்ஷன் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் போல என சாடிய அண்ணாமலை, 70 ஆண்டு கால திராவிட அரசியல், கடந்த 15 நாளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் சுக்கு நூறாக உடைந்துவிட்டது என்று விமர்சித்தார்.