உணர்ச்சிவசத்தில் அந்த காட்சியில் நடிகரை முத்தமிட்ட நடிகை - ரகசியம் பகிர்ந்த பிரல இயக்குனர்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
மாமன்னன் பட காட்சி குறித்து இயக்குனர் சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என பலர் நடிப்பில் கடந்த 29 ஆம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது மாமன்னன் திரைப்படம். ஒடுக்கப்பட்டோரின் அரசியலை பேசும் படம் என்று ரசிகர்கள்,
திரை பிரபலங்கள், சக இயக்குனர்கள், என அனைவரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
சுவாரஸ்ய தகவல்
அப்போது பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், படத்தில் ஜோதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரவீனா ரவி முதல் எனக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்று தெரியாது. சேலத்து பொண்ணு மாதிரி இருக்காங்க என்று என் மனைவி சொன்னாங்க. அப்படி ஒரு முக்கியமான முகம் எனக்கு தேவைப்பட்டதால் அவரை தேர்வு செய்தேன்.
ஒரு காட்சியில் பகத் பாசிலை கட்டியணைத்து பின் செல்லனும். அப்போது கட்டிபிடித்து முடித்த போது பகத், சட்டையில் லிப் ஸ்ட்ரிக் ஒட்டி இருந்தது. எப்படி நடந்துச்சி என்று கேட்டதற்கு நான் பண்ணல தானாவே நடந்துச்சின்னு ரவீனா ரவி கூறியதாகவும், பின் அதை சிஜி-யில் எடிட் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.