வெடித்து கிளம்பும் மார்பர்க் வைரஸ்; 9 பேர் பலி - WHO எச்சரிக்கை!
மார்பர்க் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது.
மார்பர்க் வைரஸ்
ஆப்பிரிக்க நாடான ஈக்குவடோரியல் கினியாவில் மார்பர்க் வைரஸ் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை ஒன்பது பேர் இறந்துள்ளனர்; ஏராளமான மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
மார்பர்க் வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் எபோலா வைரஸின் அறிகுறிகளைப் போலவே இருக்கின்றன என கூறப்படுகிறது. இதில் நோயாளிக்கு காய்ச்சல், நெஞ்சு வலி ஆகியவை காணப்படுகிறது. WHO பிராந்திய இயக்குனர் டாக்டர் மட்ஷிடிசோ மொய்ட்டி கூறுகையில், மார்பர்க் வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது என்றும்,
எச்சரிக்கை
அதன் நோய்த்தொற்றின் இறப்பு விகிதம் 88 சதவீதம் வரை செல்லலாம் என எச்சரிக்கிறார். நோயாளிக்கு அதிக காய்ச்சல், தலைவலி ஆகியவை இருக்கும். நோய்த்தொற்று ஏற்பட்ட ஏழு நாட்களுக்குள் பல நோயாளிகளுக்கு ரத்தக்கசிவு அறிகுறிகளும் ஏற்படலாம்.
இந்த வைரஸ் வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸுக்கு இதுவரை சிகிச்சையோ தடுப்பூசியோ கிடைக்கவில்லை, ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பதன் மூலம் நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.