உலக சாதனை படைத்த மாரத்தான் வீரர் விபத்தில் மரணம் - பெரும் சோகத்தில் மக்கள்!

Kenya Death Marathon Sports
By Jiyath Feb 12, 2024 07:18 AM GMT
Report

உலக சாதனை படைத்த கென்யா மாரத்தான் வீரர் கெல்வின் கிப்டம் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கெல்வின் கிப்டம்

சிறந்த மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவராக இருப்பவர் கெல்வின் கிப்டம் (24). கென்யாவை சேர்ந்த இவர், கடந்த அக்டோபரில் சிகாகோ மாரத்தானில் 2:00:35 என்ற உலக சாதனையை நிகழ்த்தி, சக கென்யாவை சேர்ந்த வீரரான எலியுட் கிப்சோஜினின் சாதனையை முறியடித்தார்.

உலக சாதனை படைத்த மாரத்தான் வீரர் விபத்தில் மரணம் - பெரும் சோகத்தில் மக்கள்! | Marathon Record Holder Kelvin Kiptum Died

இந்நிலையில் கெல்வின் கிப்டம் காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அவருடன் காரில் சென்ற அவரது பயிற்சியாளரும் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோனிக்கு 'நம்பர் 7' ஏன் மிக முக்கியம் தெரியுமா..? - அவரே கூலாக சொன்ன பதில் இதுதான்!

தோனிக்கு 'நம்பர் 7' ஏன் மிக முக்கியம் தெரியுமா..? - அவரே கூலாக சொன்ன பதில் இதுதான்!

மக்கள் சோகம் 

இதை உறுதிப்படுத்திய கென்ய நாடாளுமன்ற உறுப்பினர் கிடியோன் கிமையோ வெளியிட்டுள்ள அறிக்கையில் "உலக மராத்தான் சாதனையாளரான கெல்வின் கிப்டம் மற்றும் அவரது பயிற்சியாளர் எல்டோரெட்-கப்டகாட் சாலையில் நடந்த ஒரு சோகமான விபத்தில் காலமானதை தெரிவித்துக் கொள்கிறோம்.

உலக சாதனை படைத்த மாரத்தான் வீரர் விபத்தில் மரணம் - பெரும் சோகத்தில் மக்கள்! | Marathon Record Holder Kelvin Kiptum Died

தனது விளையாட்டில் கெல்வின் ஒரு ஜாம்பவான். அவரது இழப்பு கடினமான ஒன்று. இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. இந்த இழப்பால் கெய்யோ தெற்கு மக்கள் சோகத்தில் உள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.