மக்களவை தேர்தல்: ஓட்டு போடாதீங்க.. மிரட்டிய மாவோயிஸ்டுகள் - பெரும் பரபரப்பு!
தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் பொதுமக்களை எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல்
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களைவை தொகுதிகளுக்கும் வரும் 26-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் இன்று மாலையுடன் 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வயநாடு தொகுதிக்குட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு இன்று காலை 6 மணி அளவில் 4 ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் வந்துள்ளனர். அவர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மிரட்டல்
மேலும், அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மக்கிமாலா தேயிலை தோட்ட பகுதிக்குள் நுழைந்து வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வீடியோவில் இருந்த காட்சிகளை கொண்டு மிரட்டல் விடுத்த மாவோயிஸ்டுகள் யார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.