400 ஏக்கரில் தயாராகும் இடம் - தமிழ்நாட்டில் பிரதமரின் தேர்தல் பிரச்சாரம்..! எங்கு - எப்போது தெரியுமா..?
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாட்டின் பிரதமர் மோடி நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு இந்த வருடத்தில் இரண்டு முறை முறையே ஜனவரி 2 மற்றும் ஜனவரி 19 ஆகிய தேதிகளில் வருகை தந்த அவர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தரவுள்ளார் என கூறப்படுகிறது.
இந்த தேர்தல் பாஜகவிற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். 10 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும் பாஜக மீண்டும் ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கியுள்ளது.
ஆனால், பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடித்திட காங்கிரஸ் கட்சியும் பெரும் முனைப்புகளை மேற்கொண்டு வருவதை புறந்தள்ளிவிட முடியாது.
400 ஏக்கரில்...
சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருக்கும் நாட்டின் பிரதமரும் , மீண்டும் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி, தமிழ்நாட்டிலும் பிரச்சாரத்த்தில் ஈடுபடவுள்ளார். அதற்காக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 400 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல்லடம் அடுத்த மாதப்பூரில் அந்த இடத்தில அமைந்துள்ள கருவேல மரங்களை வெட்டி, இடத்தை சீர் செய்யும் பணியில் பாஜகவின் மாநில துணை தலைவர் முருகானந்தம் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
ஆனால், பிரச்சாரம் எப்போது நடைபெறும் என்பதை குறித்து எந்த தகவலும் இது குறித்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.