பல பெண்கள் மாதம்பட்டி ரங்கராஜால் பாதிப்பு; என்னிடமே சொன்னாங்க - ஜாய் கிரிஸில்டா பகீர்!
பல பெண்கள் மாதம்பட்டி ரங்கராஜால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜாய் கிரிஸில்டா தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார். தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக கூறி ஜாய் கிரிசில்டா சென்னையில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
மேலும், தன்னுடன் அவர் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டார். செக்: இதற்கிடையே தன்னைப் பற்றி ஜாய் கிரிஸில்டா அவதூறாக பேசுகிறார்; அவர் வெளியிடும் வீடியோக்கள், புகைப்படங்களால் தனது பெயருக்கு தன்னுடைய நிறுவனத்துக்கும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
ஜாய் பகீர் புகார்
எனவே அவர் தன்னை பற்றி பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜும் நீதிமன்றத்தை நாடினார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அதெல்லாம் தடை விதிக்க முடியாது என்று அதிரடி உத்தரவிட்டார். இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலிருந்து எனக்கு மிரட்டல் இதுவரை வரவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் எனக்கும், எனது குழந்தைக்கும் ஏதேனும் நடந்தால் அதற்கு முழுக்க முழுக்க ரங்கராஜ்தான் பொறுப்பு.
அவரால் நான் மட்டுமில்லை நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனை அந்தப் பெண்களே என்னிடம் சொன்னார்கள்" என தெரிவித்துள்ளார்.