பல கட்சிகள் கூட்டணிக்கு வரவுள்ளன - எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..!

Tamil nadu ADMK AIADMK Edappadi K. Palaniswami
By Karthick Dec 21, 2023 02:00 AM GMT
Report

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பல கட்சிகள் அதிமுகைவன் கூட்டணிக்கு வரவுள்ளன என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மாநாடு

புரட்சி பாரதம் கட்சி சார்பில் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்ட மாநாடு நடைபெற்றது.

many-parties-are-coming-to-admk-alliance-eps

இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி மாநாட்டில் பேசியது வருமாறு - 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணிக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வர உள்ளன.

அதில் முதல் கட்சியாக மாநாடு மூலம் புரட்சி பாரதம் கட்சி முன்னிலை வகிக்கிறது. மதம், சாதி போன்றவை அப்பாற்பட்ட கட்சி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆகும்.

many-parties-are-coming-to-admk-alliance-eps

கடந்த ஆட்சியில் கல்வியில் மாணவ மாணவிகள் ஏற்றம் பெற பை, புக், சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நான் முதலமைச்சராக இருந்தபோது எடுத்தோம், ஆனால் இந்த அரசு எடுக்கவில்லை. புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற அதிமுக கூட்டணி கட்சிகள் பாடுப்பட வேண்டும்.

அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி..!!

அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி..!!

எதிரணியை டெபாசிட் இழக்க செய்து நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று வேண்டும். அதிமுகவின் கொள்கை தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஏற்றம் பெற வேண்டும் என்பதே என பேசினார்.