கேப்டனாக நிறைய பண்ணியிருக்கேன்.. அதற்கு நான் வெட்கப்படவில்லை - மனம் திறந்த கோலி
ஒரு கேப்டனாக நிறைய தவறுகள் செய்துள்ளதாக கோலி மனம் திறந்துள்ளார்.
விராட் கோலி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. தோனிக்கு பிறகு இந்திய அணியை நெடுங்காலம் தலைமை வகித்து நடத்தியவர். ஆனால், ஒரு ஐசிசி கோப்பையை கூட இந்திய அணி வெல்லவில்லை.
இதனால் அவரை கேப்டன்சியிலிருந்து நீக்கினர். 2015ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து எம்எஸ் தோனியின் ஓய்வுக்குப் பிறகு கோலி இந்திய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2017ல் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து தோனி விலகிய பிறகு கோலி பொறுப்பேற்றார்.
கேப்டன்சி அனுபவம்
2013 முதல் 2021 வரை ஐபிஎல் ஆர்சிபியை வழிநடத்தினார். 2021 டி 20 கிரிக்கெட்டில் இருந்து ராஜினாமா செய்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 1 மாதத்திற்கு பின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்த பிறகு 2022 இல் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சியிலிருந்து விலகினார்.
2022ல் ஆர்சிபிக்கு ஃபாஃப் டு பிளெசிஸ் பொறுப்பேற்றார். இந்நிலையில், கோலி "நான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்வதறகு நான் வெட்கப்படவில்லை. ஆனால் நான் எடுத்த எந்த ஒரு முடிவும் என் தனிப்பட்ட நலனுக்காக நான் செய்தது கிடையாது.
சுயநலமாக நான் நடந்துகொள்ளவில்லை. அணியின், அணி வீரர்களின் நலனைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகள் அவை. அணியை முன் நகர்த்தி செல்ல என்ன செய்யவேண்டுமோ செய்தேன். அதில் தோல்விகள், சறுக்கல்கள் இருந்தன.
ஆனால் எனது நோக்கம் தவறாக இருந்ததில்லை" எனக் கூறியுள்ளார்.
சமீப காலமாகவே பேட்டிகளில் கோலி தனது கேப்டன்சி அனுபவம் குறித்து அவ்வப்போது பேசி வருவது குறிப்பிடத்தக்கது.