கம்பீரை பார்த்து கோலி கோலி என கோஷம் போட்ட ரசிகர்கள் - ஆட்டம் பாதிப்பு!
கம்பீரை நோக்கி ரசிகர்கள் கோலி என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
LSG vs SRH
ஐபிஎல் தொடரின் 58வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடியது. இதனிடையே லக்னோ அணியின் பந்துவீச்சின் போது ஆவேஷ் கான் வீசிய நோல்-பால் 3வது நடுவரால் வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்பட்டமாக நோ-பால் என்று தெரிய வந்த நிலையில், மூன்றாவது நடுவர், அதனை நோ-பால் என்று அறிவிக்காமல், சரியான பந்து என்று அறிவித்தார்.
வைரல் வீடியோ
இதனால் அதிர்ச்சியடைந்த கிளாஸன், கள நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து, ஐதராபாத் அணியின் ரசிகர்களும் வெகுண்டெழுந்தனர். இதனால் லக்னோ அணியின் ஓய்வறையை நோக்கியும், கம்பீரை நோக்கியும் விராட் கோலி, விராட் கோலி என்று கோஷம் எழுப்பினர்.
Hyderabad crowd chanting kohli kohli infront of Lucknow dugout never mess with Virat Kohli and RCB fans.pic.twitter.com/mfkRYBdYrj
— Johns. (@Cric_crazyjohns) May 13, 2023
அதேபோல் சில ரசிகர்கள் நட்டுகள், போல்ட்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆட்டம் சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.