பைத்தியக்காரன் மாதிரி இருந்தேன் .. என்னை மாத்துனதே இவர்தான் : உருகிய விராட் கோலி

Virat Kohli
By Irumporai Apr 17, 2023 04:27 PM GMT
Report

ஜியோ சினிமாவுக்காக பேட்டி ஒன்றில் பங்கேற்ற விராட் கோலி பல்வேறு விவகாரங்கள் குறித்து பதில் அளித்தார்.

அதன் சுருக்கம் உங்களுக்காக

சச்சின்தான் எனது குரு

 நான் 71 சதங்கள் அடித்த பிறகு சச்சினையும் என்னையும் சிலர் ஒப்பிட்டு பேசத் தொடங்கி விட்டார்கள். சச்சின் தான் எனக்கு கிரிக்கெட் விளையாடவே ஊக்கமாக இருந்தவர். சச்சின் ரன்கள் அடிக்கும் போதெல்லாம் நமது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்று நினைப்பு வரும். சச்சின் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோரை எல்லாம் நம்முடன் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது.

பைத்தியக்காரன் மாதிரி இருந்தேன் .. என்னை மாத்துனதே இவர்தான் : உருகிய விராட் கோலி | Virat Kohli Shares Lowest Point Before Asia Cup

விராட்கோலி விளக்கம்

அவர்களெல்லாம் வேறொரு தரம். சில சமயம் என்னை அவர்களுடன் ஒப்பிடும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறேன் என்ற நினைப்பு மட்டும் வரும். ஆசியக் கோப்பைக்கு முன்பு வரை நான் சரியாக கிரிக்கெட் விளையாடவில்லை. தொடர்ந்து ஆட்டம் இழந்து வந்தேன். இதனால் ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் போது இதுதான் நான் சர்வதேச கிரிக்கெட் விளையாடப் போகும் கடைசி மாதமாக இருக்கும் என நினைத்தேன்.

பைத்தியக்காரன் மாதிரி இருந்தேன் .. என்னை மாத்துனதே இவர்தான் : உருகிய விராட் கோலி | Virat Kohli Shares Lowest Point Before Asia Cup

ஆனால் 71 வது சதம் அடித்த பிறகு அனைத்தும் மாறிவிட்டது. இந்த ஒரு சதத்திற்காகவா நான் ஒன்றரை ஆண்டுகளாக பாடுபட்டேன் என்ற நினைப்புத் தோன்றியது. சதம் வந்த உடன் அனைத்து எண்ணங்களும் ஒரு நொடியில் போய்விட்டது. அவ்வளவுதான் இதற்காக நான் பைத்தியக்காரத்தனமாக இருந்தேன் என்று என்னையே நான் திட்டிக் கொண்டேன்.

என் மனைவி அனுஷ்கா சர்மாவிடம் நான் உரையாடுவது விலை மதிப்பற்றது. நான் என்ன தவறு செய்கிறேன் என்பதை என் முகத்துக்கு நேராக உண்மையை சொல்லி விடுவார். அவர் மட்டும் என் அருகில் இல்லை என்றால் நான் ஆசிய கோப்பைக்கு முன்பெல்லாம் பைத்தியக்காரனாக தான் இருந்திருப்பேன். அவர்தான் என்னை மனிதர் ஆக்கினார்.