இன்னும் பஞ்சாயத்து முடியல..!! திரிஷா மீது ஆக்ஷன் எடுத்த மன்சூர் அலி கான்!!
லியோ படத்தில் நடித்ததை குறித்து மன்சூர் அலி கான் திரிஷா பற்றி குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மன்சூர் அலி கான் திரிஷா விவகாரம்
சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அந்த பேச்சிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு காவல்துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மீண்டும் சர்ச்சை
அதனை தொடர்ந்து தான், மன்சூர் அலி கான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால் பிறகு அதனை மன்சூர் அலி கான் மறுக்க, திரிஷா தரப்பில் இருந்து வழக்கு எதுவும் வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சில நாட்கள் இந்த சர்ச்சை ஓய்ந்ததாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மன்சூர் அலி கான் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.மூன்று பேரும் தலா 1 கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்து உள்ளார்.
மன்சூர் அலிகான் தாக்கல் செய்த இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வர இருப்பதாக சொல்லப்படுகிறது.