கண்ணதாசன் ஆபிஸ் பாய்; ரப்பர் ஸ்டாம்ப், லேப்டாப் திருட்டு - மன்சூர் அலிகான் குற்றச்சாட்டு!

Tamil nadu Mansoor Ali Khan
By Jiyath Mar 17, 2024 06:03 AM GMT
Report

நடிகர் மன்சூர் அலிகான் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பதவியிலிருந்து நீக்கம் 

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மன்சூர் அலிகானை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கண்ணதாசன் ஆபிஸ் பாய்; ரப்பர் ஸ்டாம்ப், லேப்டாப் திருட்டு - மன்சூர் அலிகான் குற்றச்சாட்டு! | Mansoor Ali Khan Statement About Party Issue

இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் வெளியிட்ட அறிக்கையில், “நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் சார்பில் கூட்டணி குறித்தான முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கா.கண்ணதாசனுக்கு அளிக்கப்படுகிறது. பொதுச்செயலாளர் தலைமையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி தேர்தல் பரப்புரை குழுவானது கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற இயக்கத்திற்கு பொதுச் செயலாளர் ஆக குன்றத்தூரைச் சேர்ந்த பாலமுருகன் தான் உள்ளார்.

சிஏஏ சட்டம்: எங்கள் விருப்பம் இதுதான் - இந்திய அரசுக்கு தாலிபான் அறிவுறுத்தல்!

சிஏஏ சட்டம்: எங்கள் விருப்பம் இதுதான் - இந்திய அரசுக்கு தாலிபான் அறிவுறுத்தல்!

திருடிச் சென்றுள்ளார்

சகோதரர் கண்ணதாசன் என்ற நபர் மூத்த சங்க உறுப்பினர் செல்லபாண்டியனால் ஆபிஸ் பாயாக வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்தவர்களை படம்பிடித்து கட்சியில் சேர்ந்ததாக காட்டியும், அவ்வப்போது உடன் வருகிறேன், அண்ணா என்று வந்தும் பயன் பெற்றார்.

கண்ணதாசன் ஆபிஸ் பாய்; ரப்பர் ஸ்டாம்ப், லேப்டாப் திருட்டு - மன்சூர் அலிகான் குற்றச்சாட்டு! | Mansoor Ali Khan Statement About Party Issue

தமிழ்நாடு தமிழருக்கே என்று சட்டை அணிந்து வந்ததை கண்டித்தேன். மேலும் இலங்கைக்கு யாரையோ அனுப்ப வேண்டும் என ஒரு லட்சம் ரூபாய் கேட்டார். சமீபத்தில் அலுவலக ரப்பர் ஸ்டாம்ப், ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளார். அவர் சேர்த்த உறுப்பினர்களை விடுவித்து புதிய உறுப்பினர்களைக் கொண்டு, மீள் மனு செய்து தேர்தல் ஆணயத்திடம் ஒப்புதல் வாங்கி, விட்டோம். அவர் குறித்து யாரும் கவலை தெரிவிக்க வேண்டாம்.

தமிழனை வேலைக்கு இதனால் தான் யாரும் வைப்பதில்லை. நான் ஆரணி, பெரம்பலூர் பகுதியில், ஆதரவு திரட்டி வருவதால்... மிகுந்த வேலையாக உள்ளேன். உறுப்பினர்கள் யாரும் அவர் மீது கோபம் கொள்ள வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.