அதிமுக - பாஜக பி டீமா..? வேட்டு வைக்கப்போவதே நான் தான் - மன்சூர் அலி கான் அதிரடி
வேலூர் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் நடிகர் மன்சூர் அலி கான்.
மன்சூர் அலி கான்
இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியின் தலைவரான மன்சூர் அலி கான் தொடர்ந்து அதிரடியான நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகின்றார்.
தேர்தலுக்கு முன்பாக அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தேனியில் போட்டியிட்டால் அவருக்கு எதிராக தான் களமிறங்குவேன் என அதிரடியாக தெரிவித்த அவர், அதிமுகாவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து தற்போது அவர் சுயேட்சையாக வேலூர் தொகுதியில் களமிறங்குகிறார்.
தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கிய அவர், அண்மையில் வேலூர் மக்கான் அருகே உள்ள புதிய மீன் மார்க்கெட்டிற்குச் சென்று, அங்குள்ள வியாபாரிகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடி வாக்கு சேகரித்தார்.
வேட்டு வைக்கப் போகிறேன்
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, “தனக்கு யாரும் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டு, தானே வெற்றி பெறப்போவதாக குறிப்பிட்டார்.
பலர் கேட்டுக்கொண்டதன் பேரில் வேலூரில் போட்டியிடுவதாக தெரிவித்தார். மோடி நடத்துவது "நாடகத் தேர்தல்" என கடுமையான விமர்சனத்தை முன்வைத்த மன்சூர் அலி கான், எல்லாவற்றையும் முன் கூட்டியே செய்துவிட்டுதான் தேர்தலை நடத்துகிறார் என்று குற்றம்சாட்டி அதனை தான் துவக்கத்தில் இருந்தே செய்து வருவதாக சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய மன்சூர் அலி கான், இஸ்லாமிய வாக்கைப் பிரிக்க பாஜக - அதிமுகவின் பி டீம் ஆக தான் மாறிவிட்டடதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு “தான் யாருக்குமே பி டீம் அல்ல என உறுதிபட தெரிவித்து பொறுத்திருந்து பாருங்கள், எல்லோருக்கும் தான் வேட்டு வைக்கப் போகிறேன் என்று அதிரடியாக கூறினார்.