கிளிய வளர்த்து பாழுங்கிணற்றுல தள்ளிட்டியே நாட்டாம - மன்சூர் அலி கான்
சரத்குமார் கட்சியை பாஜகவில் இணைத்ததை நகைச்சுவையாக விமர்சித்துள்ளார் மன்சூர் அலி கான்.
சரத் குமார் - பாஜக
2 நாட்களுக்கு முன்பு தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தார் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான சரத்குமார். இது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.
அதில் பெரும்பாலும் விமர்சனங்களே இடம்பெற்றுள்ளது. அந்த வரிசையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலி கான் சரத்குமார் குறித்தான கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
கிளிய வளர்த்து..
இது குறித்து அவர் பேசும் போது, கிளிய வளர்த்து பாழுங்கிணற்றுல தள்ளிட்டியே நாட்டாம என நகைச்சுவையாக பதிலளித்தார். நீங்களும் கட்சியை அது போன்று இணைத்து விடுவீர்களா.? என்று வினவிய போது,
அதற்கு தான் கட்சியே ஆரம்பிக்கலாம் இருந்து விடுவேனே என்றார் மன்சூர் அலி கான்.