தீவிர கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக - இஜபு..? மன்சூருக்கு எத்தனை சீட்..!
வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலி கான்.
மக்களவை தேர்தல்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, தற்போது புது கூட்டணியை அமைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பாமக, தேமுதிக கட்சிகளுடன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டாத நிலையில், தற்போது மற்றுமொரு கட்சி அதிமுகவின் கூட்டணிக்கு வந்துள்ளது. மன்சூர் அலி கான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், அதிமுகவின் கூட்டணிக்கு அவர் சென்றுள்ளார்.
கூட்டணி பேச்சுவார்த்தை
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று நேரில் சென்று பேச்சுவார்த்தையிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நிர்வாகிகள் குழுவான திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், கே.பி.முனுசாமி, பெஞ்சமின் ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முன்னர் பேட்டி ஒன்றின் போது, அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த மக்களவை தேர்தலில் தேனீ தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று மன்சூர் அலி கான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.