தீய சக்தி பாஜக ஒழிக..அந்த 4 கோடி என் பணம் திருப்பி கொடுங்க - மன்சூர் ஆவேசம் !
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் உழவர் சந்தை வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
தீய சக்தி பாஜக
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் முக்கிய தலைவர்களும் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், வேலூர் மக்களவை தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவாரான மன்சூர் அலிகான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து நேற்று அமாவாசை என்பதால் தீய சக்தியான பாஜக மற்றும் அதற்குத் துணை போகும் அதிமுகவைத் தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும் என்றும் அவர் அந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என கூறி பூசணிக்காயை உடைத்தார். பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது காங்கிரஸுக்கு தொகுதி கிடைக்கவில்லை என்றால் ராகுல் வழி விட வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் சொன்னதுக்கு பதிலளித்த அவர், "பிரசாந்த் கிஷோர் அவர் யார், அவர் ஒரு மாமா, டாபர் மாமா அவர் ஒரு தரகர். மக்களை அவர் யூகங்கள் வகித்து 600 கோடி 6000 கோடி பணத்தைப் பெற்றுக் கொண்டு குள்ளநரித்தனம் செய்து எப்படி ஜெயிப்பது என ஆலோசனை கூறுபவர்.
போட்டுடைத்த மன்சூர்
ராகுல் காந்திக்கு தகுதி இல்லை என்றால் மோடி தான் வர வேண்டுமா? ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு 34 வருடங்கள் எந்த அரசு பதவியிலும், அதிகாரத்திலும் அந்தக் குடும்பம் இல்லை. மிகப்பெரிய நடைப்பயணத்தை ராகுல் காந்தி போல் யாரும் செய்யவில்லை.
ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி தான் பிரதமராக வரவேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம். ஏன் எனது விருப்பமும் கூட. 38 இடங்களில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறேன். பிரசாந்த் கிஷோர் ஏதோ வன்மத்தில் பேசுகிறார். அது தெளிவாகத் தெரிகிறது. அவர் கூற்று ஏற்படுவது அல்ல" என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் இருந்து 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்தது பற்றி கேட்ட கேள்விக்கு, "பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என கூறுகிறார். ஆம் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
அது என்னுடைய பணம். எனக்குப் பல தயாரிப்பாளர்கள் பணம் தர வேண்டும். அந்த பணத்தை எல்லாம் அங்கு தான் கொடுத்து வைத்துள்ளதாகக் கூறுகின்றார்கள். அதை எனக்கு அனுப்பி வைக்கச் செல்லுங்கள்" என்று நக்கலடித்தார்.