படுக்கை காட்சி.. அதுவும் அந்த நடிகையுடன், ஜாலியா பண்ணேன் - ஓப்பனாக சொன்ன மன்சூர் அலிகான்!
நடிகைகளுடன் அந்த காட்சிகளில் நடிப்பது ஜாலியாக இருக்கும் என்று மன்சூர் அலிகான் பேட்டியில் கூறியுள்ளார்.
மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு திறனால் ரசிகர்களை கவர்ந்தார், அதனால் இவருக்கு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அதன்பிறகு பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார், பின்னர் திடீரென அரசியலுக்குள் குதித்தார். தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியில் இணைந்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர் தண்னி கட்சி தொடங்கினார், அதுவும் காணாமல் போனது.
நடிகை பேட்டி
இந்நிலையில், தற்பொழுது இவரது செயல்களால் இவர் அடிக்கடி பேசப்பட்டு வருகிறார். தற்பொழுது இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகைகளுடன் படுக்கை காட்சிகள் பற்றி கூறினார். அதில், "பல நடிகைகளுடன் மோசமான படுக்கை காட்சிகளில் நடித்திருக்கிறேன். குறிப்பாக ரம்யாகிருஷ்ணனுடன் நடித்தது அருமையாக இருந்தது.
அதேபோல் விஜய் படம் ஒன்றில் நடிகை ஸ்வாதியை தூக்கி மெத்தையில் பொத்துனு போடுவது மாதிரி நடித்திருக்கிறேன். அப்போது நிறைய ரீ டேக்ஸ்லாம் எடுப்பார்கள். அப்போதெல்லாம் ஜாலி பண்ணிடுவேன்" என்று கூறினார். இது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.