திடீரென உடல் நல குறைவு - மருத்துவமனையில் மன்சூர்
மன்சூர் அலி கான் தீவிர பிரச்சாரத்தில் கடந்த சில காலமாக ஈடுபட்டு வருகின்றார்.
மன்சூர் அலி கான்
இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியின் தலைவரான மன்சூர் அலி கான் தொடர்ந்து அதிரடியான நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகின்றார்.
தனித்துவமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ள அவர், தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகின்றார். வரும் மக்களவை தேர்தலில் அவர் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மருத்துவமனையில்
அவருக்கு தேர்தல் ஆணையத்தில் பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. சின்னத்தை வைத்து வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் அவர் ஈடுபட்டார். கட்சியிலும் பல சவால்களை சந்தித்து வரும் அவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்கம் போல பிரச்சாரத்தில் இருந்த அவருக்கு திடீரென உடல்நல பிரச்சனை ஏற்படவே அவர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.