முதல்ல கல்யாணம் முடியட்டும்.. அப்புறம் தான் முதலிரவு; விஜய் கட்சி - மன்சூர் அலிகான் காட்டம்!
நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.
மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான். தான் நடத்தி வந்த தமிழ் தேசிய புலிகள் அமைப்பை, ஜனநாயக தேசிய புலிகள் என மாற்றுவதாக அறிவித்தார். தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. என்னை நான் நடிகனாக நினைக்கவில்லை. 1991ல் தான் எனது முதல் படம் வெளிவந்தது. அதற்கு முன்பே பல அரசியல் போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன்.
விஜய் கட்சி
இப்போது ஒரு முடிவோடு இறங்கி இருக்கிறேன். பல்லாவரத்தில் மாநாடு நடத்த உள்ளேன். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் எனது கட்சியில் சேர்ந்துள்ளனர். 15 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளார்கள். இந்தியா முழுமைக்கும் உரிமைக்காக போராடுவேன். நான் விடப்போவதில்லை. உண்டு, இல்லை, கொலை குத்துதான்.
அதிரடி அரசியல், உறியடி பதவிகள்.
நடிகர் விஜய் புதிதாக 'தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார். அவர் போன்றோவர்களுடன் நீங்கள் இணைந்து செயல்படலாமே, தனியாக கட்சி தொடங்குவதற்கான நோக்கம் என்ன என குறித்த கேட்டதற்கு, முதலில் கல்யாணம் நடக்கட்டும். அப்புறம் முதலிரவு பற்றி பேசலாம் எனத் தெரிவித்துள்ளார்.