கிட்னிய காணோம்.. கல் எடுக்கப்போகி மிரண்ட நோயாளி - பகீர் சம்பவம்!

Kidney Disease Uttar Pradesh Crime
By Sumathi Nov 13, 2022 03:00 PM GMT
Report

அறுவைச் சிகிச்சைக்கு சென்றவரிடம் சிறுநீரகம் திருடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

அறுவைச் சிகிச்சை 

உத்தரப் பிரதேசம், கஸ்கஞ்ச் மாவட்டம் நாக்லா தால் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் சந்திரா(53). இவர் வீட்டுக் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அடி வயிற்றில் வலி ஏற்பட்டதால் ஸ்கேன் செய்ய தனியார் பரிசோதனை மையத்திற்கு சென்றுள்ளார்.

கிட்னிய காணோம்.. கல் எடுக்கப்போகி மிரண்ட நோயாளி - பகீர் சம்பவம்! | Mans Kidney Removed Pretext Of Stone In Up

அங்கு நபர் ஒருவர் அலிகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள், நல்ல சிகிச்சை தந்து குணப்படுத்திவிடுவார்கள் என பரிந்துரை செய்துள்ளார். அவர் பேச்சை நம்பி சுரேஷ், அங்கு சென்றுள்ளார்.

கிட்ணி போச்சு

அவருக்கு சிறுநீரக கல் நீக்க அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். சுரேஷ் தனது உறவினர்கள் வரட்டும் என்று கூற அதுவரை எல்லாம் காத்திருக்க முடியாது எனக் கூறி அன்றைய தினமே அறுவை சிகிச்சை செய்து விட்டனர்.

அடுத்த மூன்றாம் நாளே அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜும் ஆகியுள்ளார். இந்நிலையில், அவருக்கு அடி வயிற்றில் மீண்டும் வலி ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அருகேயுள்ள மருத்துவமனையில் சென்று அல்ட்ராசவுன்ட் ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்.

அதிர்ச்சி சம்பவம்

அதில் சுரேஷின் இடது சிறுநீரகம் காணாமல் போன அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதனால் சுரேஷ் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். மேலும், அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து தந்ததால் தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் யார் என அடையாளம் தெரிவில்லை.

இதற்கு தன்னிடம் ரூ.28,000 கட்டணம் பெற்றதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். அதனையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.