சிசுவின் வயிற்றுக்குள் 7 கருக்கள்.. ஆடிப்போன மருத்துவர்கள் - பின்னணி என்ன!
பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் 7 கருக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
கட்டி இல்லை கரு
ஜார்க்கண்ட், ராமகர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 21 நாட்கள் முன் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அந்த குழந்தை அடிக்கடி அழுதுக் கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மருத்துவர் குழந்தையை சோதித்ததில் வயிற்றில் கட்டி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது நீர் கட்டியாக இருக்கலாம் என சந்தேகித்துள்ளனர். இதனையடுத்து குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்து வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. அதன்பின் அது கட்டி இல்லை கரு என அதிர்ச்சி தகவல் வெளியானது.
சிசுவின் வயிற்றில்
இதுகுறித்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் டி.இம்ரான் கூறுகையில், குழந்தையின் வயிற்றில் இரண்டு நீர் கட்டி இருக்கிறது என்றுதான் அறுவை சிகிச்சையை தொடங்கினோம். ஆனால், வயிற்றில் 7 கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அகற்றும்போது இது நீர் கட்டி அல்ல, கரு என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
இது ஒரு அபூர்வ நிகழ்வு. உலகில் இதுவரை இப்படி இத்தனை கருக்கள் 21 நாட்களே ஆன சிசுவின் வயிற்றிலிருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதே முதல்முறை. இதனை மருத்துவ மொழியில் foetus-in-fetu (FIF) என்று சொல்லுவார்கள்.
அதிர்ச்சி சம்பவம்
இந்த பாதிப்பு 5 லட்சத்தில் ஒருவருக்குதான் ஏற்படும். சிசுவின் முதுகெலும்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கரு தவறாக சிசுவின் வயிற்றுக்குள் சென்றிருக்கிறது. தற்போது அனைத்து கருக்களும் அகற்றப்பட்டுள்ளன. குழந்தையும் நலமாக இருக்கிறது. வழக்கமாக கொடுக்கப்படும் பால் மற்றும் நீராகாரங்களை குழந்தை எடுத்துக்கொள்கிறது.
இந்த பாதிப்பால் குழந்தையின் எதிர்காலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் சில மாதங்கள் வரை தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். இவ்வாறு 7 கருக்கள் 21 நாட்களே ஆன சிசுவின் உடலில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது
உலகில் இதுதான் முதன் முறை என்பதால் இது குறித்து அறிக்கையை விரைவில் சர்வதேச குழந்தை மருத்துவ இதழில் வெளியிட உள்ளேன். அதில் மற்ற விவரங்கள் விரிவாக இருக்கும் என தெரிவித்தார்.