திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன் - பரபரக்கும் அரசியல் களம்

Tamil nadu ADMK DMK
By Sumathi Nov 04, 2025 06:37 AM GMT
Report

மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார்.

மனோஜ் பாண்டியன்

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான பி. எச். மனோஜ் பாண்டியன் இன்று திமுக தலைவரும்,

manoj pandiyan - mk stalin

தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மனோஜ் பாண்டியன், "இன்று திராவிடக் கொள்கையை பாதுகாக்கின்ற தலைவராக,

போராட்டக் கொள்கையை எங்கும் அடகு வைக்காத ஒரு தலைவராக, எவ்வளவு சோதனை வந்தாலும் முயற்சிகளைச் சிறப்பாக செய்யக்கூடிய தலைவராகப் பார்த்து சிந்தித்து எடுத்த தீர்க்கமான முடிவுதான் தற்போது திமுகவில் இணைந்துள்ளேன்.

தவெகவுடன் புதிய கூட்டணியில் செங்கோட்டையன் - எடப்பாடிக்கு ஷாக்!

தவெகவுடன் புதிய கூட்டணியில் செங்கோட்டையன் - எடப்பாடிக்கு ஷாக்!

அதிமுகவில் ராஜினாமா

வேறொரு இயக்கத்தை நம்பி, அந்த இயக்கத்தின் சொல்படிதான் நடக்கின்ற துர்பாக்கியமான காலம்தான் தற்போது அதிமுகவில் இன்று இருக்கிறது. தன்னுடைய குடும்பத்திற்காக அதிமுக கட்சியையே அடகு வைத்துள்ள கட்சியுடன் இல்லாமல்,

திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன் - பரபரக்கும் அரசியல் களம் | Manoj Pandian Joins Dmk Criticizes Edappadi

கொள்கைக்காக உள்ள கட்சியுடன் இன்று நான் இணைந்துள்ளேன். உழைப்பை அங்கீகரித்து அங்கீகாரம் தராத உழைப்பு வேண்டாம் என்று ஒவ்வொரு தொண்டரையும் விரட்டக்கூடிய இன்று எடப்பாடி பழனிசாமியுடைய நோக்கம் என்ன, அவருடைய சிந்தனை என்ன?

கொள்கையைப் பின்பற்றக்கூடிய திராவிடக் கட்சியுடன் நான் இணைந்துள்ளேன். இன்று மாலை அதிமுக எம்எல்ஏவாக தனது பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார்.