14 வருஷமா டின்னர் உணவு சாப்பிடாத பிரபல நடிகர் - பகீர் தகவல்!
பிரபல நடிகர் தான் 14 வருடமாக இரவு உணவு சாப்பிடுவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மனோஜ் பாஜ்பாய்
கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸேபூர், ஃபேமிலி மேன் மூலம் பிரபலமானவர் நடிகர் மனோஜ் பாஜ்பாய். தற்போது அவர் நடித்துள்ள சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை படம் ஓடிடியில் மே23-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அண்மையில் தனது வழக்கமான உணவு பழக்க வழங்கங்கள் குறித்து அவர் பேசிய விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், “நான் இரவு உணவை சாப்பிட்டு 13-14 வருடங்கள் ஆகிவிட்டது என நினைக்கிறேன்.
உணவு முறை
என்னுடைய தாத்தா நல்ல உடல் வலுவுடன் ஃபிட்டாக இருப்பார். அவரைப்பார்த்து நாமும் அப்படியாக வேண்டும் என நினைத்தேன். அதற்காக அவர் என்ன சாப்பிடுகிறார், எப்படி சாப்பிடுகிறார் என்பதை பின்தொடர்ந்தேன். அவரின் உணவுப்பழக்கங்களை நான் பின்தொடரத் தொடங்கியதும் உடல் எடை குறைந்து புத்துணர்ச்சியாக உணர்ந்தேன்.
அப்போது இந்த உணவுப்பழக்க வழக்கத்தை தீவிரமாக கடைபிடிக்க ஆரம்பித்தேன். அப்போதிலிருந்து நான் 12 முதல் 14 மணி நேரம் சாப்பிடாமல் இருப்பேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இரவு உணவையும் தவிர்த்தேன். மதிய உணவுக்குப் பிறகு எங்கள் வீட்டின் சமையலறை செயல்படாது.
எங்கள் மகள் ஹாஸ்டலில் இருந்து திரும்பி வந்தால் மட்டுமே செயல்படும். ஆனால் இரவு உணவை சாப்பிடாமல் இருந்தது எனக்கு ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருந்தது. பசியைப்போக்க அதிக அளவில் தண்ணீர் குடிப்பேன். ஆரோக்கியமான பிஸ்கெட்களை உண்டு பசியை போக்கிக்கொள்வேன்.
இந்த லைஃப் ஸ்டைல் எனக்கு நல்ல பலனைக் கொடுத்தது. நீரிழிவு நோய், இதயம் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்த முறையை பெரும் உதவியாக இருந்ததது” எனத் தெரிவித்துள்ளார்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
