2 வருஷம் இருப்பார்ன்னு சொன்ன டாக்டர் ; ஆனால் 2 நாளில் இறந்த மனோபாலா - ஷாக் தகவல்!

Death Manobala
By Sumathi May 17, 2023 02:30 PM GMT
Report

2 வருடம் படுக்கையில் இருப்பார் என மருத்துவர் கூறிய நிலையில் இரண்டே நாளில் மனோபாலா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 மனோபாலா

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோ பாலா(69) உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

2 வருஷம் இருப்பார்ன்னு சொன்ன டாக்டர் ; ஆனால் 2 நாளில் இறந்த மனோபாலா - ஷாக் தகவல்! | Manobala Death Early As A Doctor Statement

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு வளசரவாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக கல்லீரம் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரது ஒரே மகன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் இருந்தார்.

 ஷாக் தகவல்

அவருக்கு தகவல் அளித்த நிலையில் அவர் தந்தையை பார்க்க வந்துள்ளார். அதற்கு முன் திரை பிரபலங்கள் பலர் மனோபாலாவை வந்து பார்த்து விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் அவரது மகன் அவருக்கு தொற்று ஏற்படும் எனக் கூறி வருபவர்களை மறுத்துவிட்டார்.

2 வருஷம் இருப்பார்ன்னு சொன்ன டாக்டர் ; ஆனால் 2 நாளில் இறந்த மனோபாலா - ஷாக் தகவல்! | Manobala Death Early As A Doctor Statement

இந்நிலையில் அவ்வப்போது மனோபாலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இன்னும் 2 வருடங்களுக்கு படுக்கையில் இருப்பார். உணவில் தொடங்கி எல்லாம் படுக்கையில் தான் எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கூறி 2 நாட்களில் மனோபாலா இறந்து போனதாக அவரது மகன் தெரிவித்தது அதிர்ச்சி அளித்ததாகவும், மருத்துவரின் வாக்கு பொய்த்து போனதாகவும் திரையுலக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.