30 வருஷமா இதுக்கு தான் அடிமை - மனோபாலா குறித்த ரகசியம் உடைத்த பிரபலம்!
மனோபாலா குடியால்தான் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
மனோபாலா
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோ பாலா உடலநலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 69. கடந்த 15 நாட்களாக கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் அவரது வீட்டில் காலமானார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் “ மனோபாலா 69 வயதில் இறந்து போக காரணம் என்ன? அவர் 85 வயது வரை வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவருடைய உடலை அவரே கெடுத்துக்கொண்டார்.
மதுவுக்கு அடிமை
எனக்குத் தெரிந்து அவர் 30 ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையாக இருந்தார். மதுவிற்கு எதிராக நாம் எவ்வளவு பிரச்சாரங்கள் நடத்தினாலும் அது மக்களிடம் சென்று சேர்வது இல்லை. காரணம், இப்போது சாவுக்கும் மது, கல்யாணத்திற்கும் மது என எல்லாவற்றிற்குமே மதுவாக இருக்கிறது.
ஆகையால் சினிமாவில் இருந்து மக்களுக்கு கிடைத்திருக்கும் பாடம் மதுவை தொடாதீர் என்பதே. விதி வந்து இறப்பது வேறு விஷயம். ஆனால் மது அருந்தி இறப்பது கேவலமான விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.