உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் - அமைச்சர் மனோ தங்கராஜ்
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியுள்ளார்.
மனோ தங்கராஜ்
மதுரையிலுள்ள ஆவின் நிறுவனத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “பால்வளத்துறை நிலையான வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஆவினில் இணைக்கப்படாத கால்நடைகளுக்கும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் முகவர்களுக்கு பால்களை விநியோகம் செய்வதற்கு புதிய நடைமுறைகள் திட்டமிடப்பட்ட வருகிறது. ஆவின் எவ்வித நிதி நெருக்கடி இல்லாமல் செயல்பட்டு|வருகிறது.
உதயநிதி ஸ்டாலின்
பால் முகவர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஆவினைப் போல் இந்தியாவில் வேறு எந்த நிறுவனமும் இவ்வளவு விலை குறைவாக பால் விநியோகம் செய்யவில்லை” என கூறினார்.
மேலும், ”5 முறை முதல்வராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. அவரைப்பற்றி அளந்து பேச வேண்டும். சீமான் மீண்டும் ஒருமுறை பிறந்து வளர்ந்தால் கூட கலைஞர் கருணாநிதியின் செயலுக்கு ஈடாக முடியாது. சீமான் போன்றவர்கள் இதுபோன்று பேசி தங்களது மரியாதையை இழக்கிறார்கள்.மைக் கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசக்கூடாது.
கருத்து சுதந்திரத்தைப் பற்றி திமுகவிற்கு கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை. உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளது. அவர் எப்போது துணை முதல்வர் ஆனாலும் மகிழ்ச்சி தான். தொண்டர்களும், பொது மக்களும் அதை தான் விரும்புகிறார்கள்.' என பேசியுள்ளார்.