வைரமுத்துவை நடமாட விடக்கூடாது - மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை

Vairamuthu
By Sumathi Aug 19, 2025 07:13 AM GMT
Report

ராமரை இழிவாகப் பேசிய வைரமுத்துவை நடமாட விடக்கூடாது என மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வைரமுத்து பேச்சு

சென்னையில் அண்மையில் நடந்த கம்பன் விழாவில், வைரமுத்து பேசுகையில், வாலி வதை செய்த போது, ராமன் தனது மனைவியை இழந்து புத்தி சுவாதீனம் இன்றி இருந்தார் என கூறினார்.

mannarkudi jeeyar - vairamuthu

அவரது இந்த பேச்சு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, பாஜகவினர் மற்றும் பல்வேறு இந்து சமுதாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு!

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு!

மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை

அந்த வகையில், மன்​னார்​குடி ராஜமன்​னார் செண்டலங்​கார ஜீயர் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், சமீப​கால​மாக இந்​துக்​களுக்கு விரோத​மான போக்கு அதி​கரித்​துள்​ளது. விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை வைக்க, இந்த அரசு கெடு​பிடிகளை விதிக்கிறது.

வைரமுத்துவை நடமாட விடக்கூடாது - மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை | Mannargudi Jeeyar Warns Vairamuthu Viral

சென்​னை​யில் நடந்த விழா ஒன்​றில், கவிஞர் வைர​முத்​து, ராமபிரானை மனநிலை சரியில்​லாதவர் என்​றும், புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்​றும் பேசியுள்​ளார்.

இந்​துக்​களுக்கு விரோத​மாக இவர் தொடர்ச்​சி​யாக பேசி வருகிறார். இது வன்​மை​யாகக் கண்​டிக்​கத்​தக்​கது. வைர​முத்​து​வை, சாலை​யில்நடமாட விடக்​கூ​டாது எனத் தெரிவித்துள்ளார்.