Friday, Jan 24, 2025

காதல் மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் - அலங்கரித்த கணவருக்கு நேர்ந்த விபரீதம்!

Chennai Death
By Swetha 8 months ago
Report

சீரியல் லைட்டால் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

அலங்கரித்த கணவர் 

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பிருந்தாவனம் தெருவைச் சேர்ந்தவர் அகஸ்டின் பால் (29). இவர் சொந்தமாக பார்சல் சர்வீஸ் நடத்தி வந்திருக்கிறார். இவரது மனைவி கீர்த்திக்கு நேற்று 25-வது பிறந்தநாள் என்பதால் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவெடுத்துள்ளார்.

காதல் மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் - அலங்கரித்த கணவருக்கு நேர்ந்த விபரீதம்! | Mann Got Electrocuted And Died During Decoration

அதற்காக நேற்று மாலை வீடு முழுவதும் சீரியல் பல்ப் அமைத்து, கொண்டாட்டத்துக்கான அனைத்து அலங்கார பணிகளையும் செய்து வந்துள்ளார்.

யஷ் பிறந்தநாள் கொண்டாட்டம் - துடிக்க துடிக்க உயிரிழந்த 3 ரசிகர்கள்..!

யஷ் பிறந்தநாள் கொண்டாட்டம் - துடிக்க துடிக்க உயிரிழந்த 3 ரசிகர்கள்..!

நேர்ந்த விபரீதம்

அப்போது, தனது காதல் மனைவியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட நினைத்த அவர் மீது எதிர்பாராத விதமாக கடும் மின்சாரம் தாக்கியுள்ளது.இதில் தூக்கி வீசப்பட்ட அகஸ்டின் பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காதல் மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் - அலங்கரித்த கணவருக்கு நேர்ந்த விபரீதம்! | Mann Got Electrocuted And Died During Decoration

இந்த தகவலறிந்து வந்த அசோக் நகர் போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அகஸ்டின் பால், கீர்த்தி தம்பதிக்கு திருமணம் நடந்து 8 மாதங்களே ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.