மஞ்சும்மல் பாய்ஸ்...நம்பவைத்து ஏமாற்று வேலை - ரசிகர்களை அதிரவைத்த செய்தி
மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு மோசடி செய்துள்ளதாக கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மஞ்சும்மல் பாய்ஸ்
மஞ்சும்மல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் கொடைக்கானலில் உள்ள குனா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் தமிழகத்தில் பிரபலமடைந்தது. இபபடத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடல் பெரும் அறிமுகத்தை படத்திற்கு தமிழகத்தில் கொடுத்தது.
படம் வெளியாகி 3 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில். படத்தின் தயாரிப்பாளர்கள் தன்னிடம் 7 கோடி பணம் பெற்று, லாபத்தில் 40% பணம் தருவதாக கூறி விட்டு தராமல் மோசடி செய்துள்ளதாக அரூரைச் சேர்ந்த ஹமீது என்பவர் புகார் அளித்துள்ளார்.
மோசடி
ஹமீதின் புகார் மனுவை விசாரித்த கொச்சி நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. படத் தயாரிப்பாளர்கள் ஷோன் ஆண்டனி, சவுபின் ஷாகிர், பாபு ஷாகிர் ஆகியோர் கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு மோசடி செய்துள்ளதாக கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் படப்பிடிப்பு துவங்கும் முன்பே, படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக கூறி ஹமீதுவிடம் பணம் பெற்றுள்ளனர். மேலும் 18.65 கோடி செலவான நிலையில், 22 கோடி செலவானதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.