பார்க்க தான் அழகு - உயிர்களை வேட்டையாடிய குணா கேவ்ஸ் கதை தெரியுமா..?
மலையாள படமான ManjummelBoys வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் குணா கேவ்ஸ் கவனம் பெற்றுள்ளது.
குணா கேவ்ஸ்
கமல்ஹாசனின் குணா படத்திற்கு பிறகு தான் "குணா கேவ்ஸ்" என்ற பெயரை அந்த இடம் பெற்றது. அதற்கு முன்பு அவ்விடத்தின் உண்மையான பெயர், "டெவில்ஸ் கிச்சன்" (Devils kitchen) என்ற பெயர் இருந்துள்ளது.
குணா படம் வெளியான பிறகு பெரும் சுற்றுலா தலமாக மாறிய இவ்விடம், தினம்தோறும் பெருந்திரளான பார்வையாளர்களை தனது அழகால் மெய்சிலிர்க்க வைக்கிறது.
16 பேர்
கொடைக்கானல் மலையில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இக்குகை சுமார் 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
மிகவும் ஆழமானது என்பதன் காரணமாக தான் இந்த குகைக்கு "டெவில்ஸ் கிச்சன்" அதாவது சாத்தானின் சமையலறை என்ற பெயர் வந்தததாக கூறப்படுகிறது.
பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும் இந்த குகை இது வரை 16 பேரின் உயிரை வாங்கியுள்ளது.
உண்மை சம்பவத்தை அடிப்படையை கொண்ட மஞ்சுமேல் பாய்ஸ் படத்தில் மீண்டும் இந்த குகை குறித்த கதை இடம் பெற்றுள்ளதால் தமிழகத்திலும் இந்த இடம் பேசும் பொருளாக மீண்டும் மாறியுள்ளது.