வீட்டிலிருந்தே கொடைக்கானல் மலர் கண்காட்சி பூக்களை காண சிறப்பு ஏற்பாடு

Kodaikanal Flower exhibition
By Petchi Avudaiappan Jun 18, 2021 05:32 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து லட்சக்கணக்கான வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் வீட்டில் இருந்தே கண்டு ரசிக்கும் விதமாக யூ-டியூப் மூலம் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். 

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வருடந்தோறும் ஏப்ரல்,மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம் , இதில் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் விதமாக பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறும், மலர்கண்காட்சியில் பூங்காவில் பூத்துள்ள வண்ண வண்ண மலர்களை கண்டு ரசிக்க வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம்.

வீட்டிலிருந்தே கொடைக்கானல் மலர் கண்காட்சி பூக்களை காண சிறப்பு ஏற்பாடு | Kodaikanal Flower Exhibition Video Available In Yt

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மலர்கண்காட்சி நடைபெறவில்லை, இந்நிலையில் இந்த வருடம் மலர்கண்காட்சியை சிறப்பாக நடத்தவும் சுற்றுலா பயணிகளின் மனதை கவரும் விதமாக ஆயிரக்கணக்கான மலர் நாற்றுகளை ஊட்டி,பெங்களூர், மும்பை ஆகிய பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலர் நாற்றுகள் நடவு பராமரித்து வந்த நிலையில் தற்போது சால்வியா,டெல்பிணையம்,ஆன்ரினியம் ,பேன்சி,பெட்டுனியா, லில்லியம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் லட்சக்கணக்கான மலர்கள் பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்குகின்றன.

அதே போல ரோஜா பூங்காவில் சன் கோல்டு,சம்மர் டிரீம்,பிரின்சஸ், பெர்ப்யூம்,டிலைட்,ஈபிள் டவர், கிலோட் கிஸ், அப் பையர் உள்ளிட்ட 1500 வகைகளில் , 16,000 செடிகளில் ரோஜா பூக்கள் பூத்து குலுங்குகின்றன, இதே போல செட்டியார் பூங்காவிலும் டேலியா, செவ்வந்தி மற்றும் பல வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

வீட்டிலிருந்தே கொடைக்கானல் மலர் கண்காட்சி பூக்களை காண சிறப்பு ஏற்பாடு | Kodaikanal Flower Exhibition Video Available In Yt

 ஆனால் இந்தாண்டும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கும், சுற்றுலா பயணிகளும் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.

 இதனால் சுற்றுலா பயணிகள் வருகையின்றி பிரையண்ட் பூங்கா,ரோஜா பூங்கா,செட்டியார் பூங்காங்களில் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

வீட்டிலிருந்தே கொடைக்கானல் மலர் கண்காட்சி பூக்களை காண சிறப்பு ஏற்பாடு | Kodaikanal Flower Exhibition Video Available In Yt

இந்நிலையில் பூங்காக்களில் பூத்து குலுங்கும் லட்சக்கணக்கான வண்ண வண்ண மலர்களை தோட்டக்கலை துறையினர் யூ-டியூப் இணையத்தளத்தில் PARKS AND GARDENS - KODAIKANAL என்ற தளத்தில் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது, 

 மேலும் கொடைக்கானலில் உள்ள மூன்று பூங்காக்களையும் கழுகு பார்வையில் காட்சிப்படுத்தி வெளியிட்டுள்ளதாகவும் இதனை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது வீட்டில் இருந்த படியே கண்டுகளிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.