பாலியல் தொல்லை..விவாகரத்து! சரியான நேரம் பார்த்து முன்னாள் கணவரை பழிதீர்க்கும் மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். அம்மொழி முன்னணி நாயகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்துள்ள மஞ்சு வாரியர், தனி நாயகியாக நடித்தும் தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
தமிழில் அசுரன் படத்தில் தனுஷுடன் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர், அதனை தொடர்ந்து அஜித்துடன் துணிவு படத்திலும் ஹிட் கொடுத்தார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் திலீப்பை 1998-ஆம் ஆண்டு மணந்து கொண்ட மஞ்சு வாரியர் 2015-இல் விவாகரத்து செய்து பிரிந்தார். அதனை தொடர்ந்து காவ்யா மாதவனை அடுத்த ஆண்டே திருமணம் செய்து கொண்டார் திலீப்.
இது போக திலீப் நடிகை பாவனாவின் பாலியல் சீண்டல் வழக்கில் பெரிதாக விமர்சிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சுமார் 5 வருடங்களாகவே மலையாள திரையில் இருந்து ஒதுங்கிய பாவனா மீண்டும் மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று பாவனா தனது பிறந்த நாளை கொண்டாடினார்.அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், மஞ்சு வாரியாருக்கு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதனை வைத்து ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை பதிவிட துவங்கிவிட்டனர்.