32 வயது நடிகருடன் படுநெருக்கமாக..வைரல் போஸ்டர் ! வைரலாகும் மஞ்சு வாரியர் பட போஸ்டர்
தமிழ் சினிமாவிலும் தற்போது கவனம் பெற்று வருகின்றார் மஞ்சு வாரியர்.
மஞ்சு வாரியர்
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். அம்மொழி முன்னணி நாயகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்துள்ள மஞ்சு வாரியர், தனி நாயகியாக நடித்தும் தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

தமிழில் அசுரன் படத்தில் தனுஷுடன் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர், அதனை தொடர்ந்து அஜித்துடன் துணிவு படத்திலும் ஹிட் கொடுத்தார். தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் அவரின் அண்மை படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி பெரும் கவனம் பெற்றது.
Footage என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில் இருவர் மிகவும் நெருக்கமாக இருப்பது இடம்பெற்றிருந்தது.

முதலில் அதனை கண்ட ரசிகர்கள் இது மஞ்சு வாரியர் என குழப்பிக் கொள்ள பின்னர் தான் அது வேறொரு நடிகை என்பது தெரியவந்துள்ளது.   
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    