நடிகையுடன் தொடர்பில் கணவர்? இதனால்தான் விவாகரத்து - மஞ்சு வாரியர் ஓபன்டாக்!
தனது விவாகரத்து குறித்து நடிகை மஞ்சு வாரியர் கூறிய தகவல் வைரலாகி வருகிறது.
மஞ்சு வாரியர்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர்(45). 3 ஆண்டுகளில் 20 படங்களில் நடித்தார். தனுஷ் நடித்த அசுரன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர், அஜித்துடன் துணிவு படத்திலும் நடித்துள்ளார்.
முன்னணி நடிகரான திலீபை திருமணம் செய்து கொண்ட இவர் சில கருத்து வேறுபாடு காரணத்தாலும், வேறொரு பெண்ணோடு தன் கணவர் தொடர்பில் இருக்கிறார் என்ற உண்மையை அறிந்து கொண்ட பின் 2014ல் விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது.
விவாகரத்து
தற்போது தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசியுள்ள மஞ்சு வாரியர், விவாகரத்துக்கு என்ன காரணம் என்று கூறுவதால் எந்த நல்லதும் நடக்கப் போவதில்லை. மாறாக எனக்கு அது வேதனையை தான் கொடுக்கும். எனவே அந்த காரணத்தை வெளியில் சொல்லாமல் தவிர்த்து விடுகிறேன்.
எனவே அதற்கு உண்டான காரணத்தை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை.
விவாகரத்தில் பெற்ற பிறகும் நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். அப்படியே இருக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், திலீப் தீலீப் காதலித்து வந்த மற்றொரு நடிகையை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.