திருமணத்துக்கு ஒற்றுக்கொள்ளவில்லை; முன்பே கர்பம்? மஞ்சிமா மோகன் ஓபன்டாக்!
தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு நடிகை மஞ்சிமா மோகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மஞ்சிமா மோகன்
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தில் மஞ்சிமா மோகன் அறிமுகமானார். இதை தொடர்ந்து மஞ்சிமா மோகன் - கெளதம் கார்த்திக் ஆகிய இருவரும் காதலித்து கடந்த 2022ல் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த சூழலில், திருமணத்திற்கு முன்பே மஞ்சிமா கர்ப்பமாக இருந்தார், நடிகர் கார்த்திக்கிற்கு திருமணத்தில் பெரிதாக விருப்பமில்லை என்று பரவிய வதந்திகள் குறித்து பாட்காஸ்ட் பேட்டி ஒன்றில் மஞ்சிமா பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், “எங்களது திருமணம் நடந்தபோது நிறைய வதந்திகளை சமூகவலைதளங்களில் பார்க்க முடிந்தது.
அதாவது, நான் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானேன் என்றும், எனது மாமனாருக்கு திருமணத்தில் விருப்பமில்லை. அவரை நாங்கள் ஒருமுறைதான் அழைத்தோம் என்ற ரீதியில்பேசினார்கள். இது எங்கள் வீட்டு திருமணம். அப்படி இருக்கும் போது முறைப்படி அழைக்க வேண்டும் என்பது இல்லை. இதெல்லாமே கட்டுக் கதைகள்தான்.
கர்ப்பம்?
சில வதந்திகள் எங்கள் குடும்பத்தது உண்மை. பல வதந்திகளை நானும் சந்தித்திருக்கிறேன். திருமணத்திற்கு முன்பு இவை எல்லாம் என்னை பாதித்ததில்லை. ஆனால், திருமணத்திற்கு பின்பு நானும் ஒருக்கட்டத்தில் இதனால் வருத்தமடைந்தேன். குறிப்பாக, கெளதமிற்கு நான் ஏற்ற ஜோடியில்லை என்றெல்லாம் சொன்னார்கள்.

நீ எதைப் பற்றி கவலைப்படுகிறாய் என்று சொன்னால்தான் எனக்குத் தெரியும். எனக்கு உன்னைப் பற்றி எல்லாம் தெரியும் என்று நினைக்காதே! தம்பதிகள் ஓப்பனாக எல்லாவற்றையும் பேச வேண்டும்” என கெளதம் என்னிடம் கேட்டார். அவர் மிகவும் அன்பானவர்.
சமூகவலைதளங்களில் சிலர் ஜோடியாக புகைப்படங்கள் பதிவிடும்போது ‘எப்போதும் நாமும் இப்படி பதிவிடுவோம்?” என்று தோன்றும்.
ஆனால், எங்கள் திருமணம் பற்றி அறிவித்ததுமே எல்லாமே சோஷியல் மீடியாவில் உள்ளது. இப்போது நான் பேசும்போது கவனமாக இருக்கிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பேசவில்லை என்றால் ஜட்ஜ் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்” என்று பேசியுள்ளார்.  
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    