தாலி கட்டினதும் மஞ்சிமாவை கட்டி பிடித்து அழுத கவுதம் கார்த்திக்.... - வைரலாகும் வீடியோ... - ரசிகர்கள் நெகிழ்ச்சி...!
தாலி கட்டினதும் மஞ்சிமாவை கட்டி பிடித்து அழுத கவுதம் கார்த்திக்கின் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் கவுதம் கார்த்திக்
பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன்தான் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து, ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை மஞ்சிமா மோகன்
நடிகை மஞ்சிமா மோகன் மலையாள நடிகையாவார். இவர் சிம்பு நடிப்பில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதனையடுத்து, ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தபோது இவருக்கும், நடிகர் கவுதம் கார்த்திக்கும் காதல் மலர்ந்தது.
திருமணம்
சமீபத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகனின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் ஜீவா, விக்ரம் பிரபு, ஆர்.ஜே.பாலாஜி, ஆர்.கே.சுரேஷ், நடிகை பிரியா பவானி சங்கர், இயக்குனர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
மஞ்சிமாவை கட்டி பிடித்து அழுத கவுதம் கார்த்திக் -
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மஞ்சிமா மோகன் கழுத்தில் தாலி கட்டியதும் அவரை கட்டிப்பிடித்து கவுதம் கார்த்திக் அழுதுள்ளார். அத்தருணம் மஞ்சிமா மோகனும் கண்கலங்க, கூடி இருந்த உறவினர்கள் நெஞ்சம் ஆனந்தத்தில் கண்ணீர் சிந்தினர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள், இதைப் பார்க்கவே நெஞ்சம் நிறைகிறது என்று வாழ்த்து கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.