அதை சொன்னா என்னை தப்பா பேசுவாங்க; இருந்தாலும்.. மனிஷா கொய்ராலா பளீச்
ஆண் நண்பர்கள் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா மனம் திறந்துள்ளார்.
நடிகை மனிஷா கொய்ராலா
மணிரத்னம் இயக்கிய பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. முதல் படத்திலேயே அழகாலும், துறு துறு நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பிடித்தார்.
தொடர்ந்து உடனே ஜாக்பாட்டாய் அமைந்தது ஷங்கரின் இந்தியன் திரைப்படம். அதில் தனது நடிப்பின் மூலம் கட்டிப்போட்டதால், அடுத்த படமான முதல்வனிலும் ஹீரோயினாக வாய்ப்பு வழங்கினார். அப்போது கொடி கட்டிப் பறந்தார் மனிஷா கொய்ராலா.
அதனையடுத்து மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 2010ல் சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்து கொண்டு, கருத்து வேறுபாடால் அவரை பிரிந்தார். இதையடுத்து கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் மீண்டார்.
ஆண் நண்பர்கள்
இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர், "ஆண்கள் (நடிகர்கள்) மட்டும் நிறைய பெண் தோழிகளுடன் பழகுவதைப் பெருமையாக வெளியில் சொல்லிக் கொள்கிறார்கள். கேட்பவர்களும் அதைப் பெருமையாகவே கருதி எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால், பெண்கள் (நடிகைகள்) நிறைய ஆண்கள் நண்பர்களுடன் பழகினால் தவறாகப் பேசுகிறார்கள். பெண்கள் விஷயத்தில் மட்டும் அதை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் தவறாகப் பேசுகிறார்கள். எனக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் அதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை.
இதைச் சொன்னால் என்னைத் தவறாகப் பேசுவார்கள். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. பெண்கள் பேசினால் அவர்களின் அது அவர்களின் சொந்த வாழ்க்கையைப் பாதிக்கிறது. ஆண்களுக்கு மட்டும் அது பெருமையாகப் பார்க்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.