பற்றி எறியும் மணிப்பூர் - கண்டதும் சுட்டுத்தள்ள ஆளுநர் உத்தரவு!
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினரின் போராட்டத்தில் நடந்த வன்முறை முற்றியதால் கவர்னர் போட்ட உத்தரவு.
பழங்குடியினர் போராட்டம்
மணிப்பூர் மாநிலத்தில், மெய்டேய் சமூகத்தை சேர்ந்த பட்டியலிடப்பட்ட பழங்குடி பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து மாணவர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை ஊர்வலத்தின் போது வன்முறை ஏற்பட்டது.
இதில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினம் அல்லாதோர் இடையே மோதல் ஏற்பட்டது பிறகு கலவரம் ஆனது. இதனை தொடர்ந்து 8 மாவட்டங்களில் ஊரடங்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மொபைல் சேவை முடக்கப்பட்டது.
ஆளுநர் உத்தரவு
இந்நிலையில், பாதுகாப்பு படையினர் 4000 பேரை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இந்த வன்முறை நடந்துவருவதால் அம்மாநில ஆளுநர் அதிரடி உத்தரவை போட்டுள்ளார்.
கலவரம் உச்சத்தை எட்டியுள்ளதால், கலவரத்தை கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை கண்டதும் சுட மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.