பாஜக அரசின் திட்டமிட்ட சதி - போராடும் மணிப்பூர் பழங்குடி மக்கள்!

Manipur
By Vinothini May 23, 2023 09:26 AM GMT
Report

மணிப்பூரில் வீடுகளுக்கு தீ வைத்து மீண்டும் கலவரம் வெடித்ததால், அங்கு ஊரடங்கு உத்தராவது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலவரம்

மணிப்பூர் தலைநகர், இம்பாலில் மேதேயி சமுதாய மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

manipur-violence-erupts-cm-announces-lockdown

இதில் 64 சதவீதமாக மேதேயி சமுதாய மக்கள் அங்கு உள்ளனர், இவர்கள் அங்கு மலைப் பகுதிகளில் நிலம் வாங்க அனுமதி இல்லை. மலைப் பகுதிகளில் குக்கி இன பழங்குடியினர் வசிக்கின்றனர்.

இதனால் மேதேயி சமுதாய மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பழங்குடியினர் பேரணி நடத்தி வந்தனர்.

இதனால் அங்கு கலவரம் வெடித்தது, அதில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஊரடங்கு

இந்நிலையில், தலைநகரான இம்பாலில் மீண்டும் இரு சமூதாயத்தினர் இடையே நேற்று மதியம் மோதல் ஏற்பட்டது.

manipur-violence-erupts-cm-announces-lockdown

அதனால் அங்கு உள்ள வீடுகளில் தீ வைத்து எரிக்கப்பட்டதால், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு மாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

புதிய வன்முறைகளுக்கு மத்தியில் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மாநிலம் முழுவதும் இணையம் சேவை துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான மாநில பாஜக அரசு தங்களை காடுகளிலிருந்தும் மலைகளில் இருந்தும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது எனவும், திட்டமிட்டு தங்களைக் குறிவைத்து செயல்படுவதாகவும் குக்கி பழங்குடியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.