ஒலிக்கும் மரண ஓலம்; வெடிக்கும் வன்முறை - 150 தமிழர்கள் தவிப்பு!
மணிப்பூரில் ஏற்பட்ட மோசமான வன்முறையில் 150க்கும் மேற்பட்டு தமிழர்கள் சிக்கியுள்ளனர்.
வன்முறை
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக மைத்தேயி இன மக்கள் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர். பெரும்பான்மையாக உள்ள
மைத்தேயி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து அளிக்கப்பட்டால் அது தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே இதனை கண்டித்து நடத்தப்பட்ட அமைதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது.
தமிழர்கள் தவிப்பு
அங்குள்ள கடைகளும் வீடுகளும் எரிக்கப்பட்டு, தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கே இணையச் சேவை துண்டிக்கப்பட்டு, ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே அங்கே சுமார் 150 தமிழர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் பலர் மருத்துவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ், 23,000க்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டு, இயக்க தளங்கள் மற்றும் ராணுவ முகாம்களுக்கு மாற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 55 ஆக உயர்ந்தது, ஆனால் சேதம் மற்றும் இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை குறித்து சிறிது தெளிவு இல்லை.