அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தம் - பற்றி எரியும் மணிப்பூர்

By Thahir May 06, 2023 03:57 AM GMT
Report

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை எல்லை ரயில்வே அறிவித்துள்ளது.

வெடித்தது கலவரம் 

மணிப்பூர் மாநிலத்தில் மொய்தி சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் பேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது.

பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் 10 மலைப் பிரதேச மாவட்டங்களில் இந்த பேரணி நடைபெற்ற போது கலவரம் ஏற்பட்டது.

All train services suspended in Manipur

கலவரத்தினால் ஏராளமான கடைகள், வீடுகள், சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டன. இதையடுத்து கலவரப் பகுதிகளில் இருந்து 9 ஆயிரம் போலீசார் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அண்டை மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் ஆகியவை மணிப்பூரில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

All train services suspended in Manipur

கலவரத்தை அடுத்து அங்குள்ள நிலவரங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆன்லைன் மூலம் ஆய்வு செய்தார். 

காவல்நிலையங்களில் ஆயுதங்கள் திருட்டு 

இதையடுத்து முதலமைச்சர் பைரன் சிங்குடன் காணொலி மூலம் ஆலோசித்த அவர், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு 10 கம்பெனி படை மூலம் 1000 மத்திய படை வீரரர்களை மணிப்பூருக்கு அனுப்புவதாக அறிவித்தார்.

கலவரத்தின் போது மணிப்பூரில் 23 காவல் நிலையங்களில் அயுதங்கள் திருடப்பட்டுள்ளதாக டிஜிபி டவுங்கல் தெரிவித்துள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட அயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் உடனடியாக திருப்பி கொண்டு வந்து ஒப்படைக்குமாறு டிஜிபி டவுங்கல் கேட்டுக்கொண்டுள்ளார்.