மணிப்பூரில் தொடர்ந்து வெடிக்கும் கலவரம் - 11 பேர் படுகொலை!
மணிப்பூரில் மக்களிடையே தொடர்ந்து நடக்கும் வன்முறையில் 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கலவரம்
மணிப்பூரில் அதிகமாக வாழும் குக்கி இனக்குழு மக்களுக்கும், தாழ்வான நிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் சமூகமான மெய்த்தி இனத்தவருக்கும் இடையே மே 3 அன்று வன்முறை வெடித்தது.
பொருளாதார நன்மைகள் மற்றும் மலையக மக்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க வேலைகள் மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு காரணமாக போராட்டம் நடத்தி அது கலவரமாக வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர், மேலும் சிலர் இடம்பெயர்ந்தனர். இந்த கலவரம் காரணமாக ஊரடங்கு போடப்பட்டது, மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டது.
படுகொலை
இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமன்லோக் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவில் அங்கு உள்ள வீடுகள் மீது குண்டு வீசப்பட்டது. இதில் சிலர் உயிரிழந்தனர், சிலர் உயிரை காத்துக்கொள்ள வெளியே தப்பி ஓடும்போது துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
இந்த கலவரத்தால் அங்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்த தாக்குதல் நடத்திய ஆயுத குழுவிடம் பல நவீன ஆயுதங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.