வெடித்த வன்முறை; 54 பேர் பரிதாப பலி - இடம்பெயர்ந்தவர்களின் நிலை என்ன?
மணிப்பூரில் வெடித்த வன்முறையில் 54 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெடித்த வன்முறை
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக மைத்தேயி இன மக்கள் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர். பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து அளிக்கப்பட்டால் அது தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே இதனை கண்டித்து நடத்தப்பட்ட அமைதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. அங்குள்ள கடைகளும் வீடுகளும் எரிக்கப்பட்டு, தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கே இணையச் சேவை துண்டிக்கப்பட்டு, ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் கேள்வி
தற்போது வரை இம்மோதல்களில் 54 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் மணிப்பூர் கலவரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தொடர்ந்து, விசாரணை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு, நிலவரம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.