முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய் மீது தீவிரவாத தாக்குதல் - அதிர வைக்கும் சம்பவம்!
முதல்வரின் பாதுகாப்பு கான்வாய்மீது தீவிரவாத தாக்குதல் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு கான்வாய்
மணிப்பூர் மாநிலம், காங்கோக்பி மாவட்டத்தில் அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பாதுகாப்பு கணவாய் மீது கான்வாய் மீது திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.
முதலமைச்சரின் கான்வாய்,காலை இம்பாலில் இருந்து ஜிரிபாம் மாவட்டத்துக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தன. அப்போது இந்த பயங்கர தாக்குதல் நடந்ததாக இந்த சம்பவத்தை நேரில் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாத தாக்குதல்
ஜிரிபாம் பகுதியில் சில நாட்களுக்கும் முன்பு அடையாளம் தெரியாத தாக்குதல்தாரிகளால் ஒரு நபரின் தலை துண்டிக்கப்பட்டது. இந்த விவகாரம் பிராகி அப்பகுதியில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக முதல்வர் பிரேன் அங்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
இதை ஏற்பட்ட வன்முறையால் ஜிரிபாமில் சில அரசு அலுவலகங்கள் உள்பட சுமார் 70 வீடுகள் எரிக்கப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இச்சூழலில் முதல்வர் அங்கு நாளை செல்ல இருந்தார்.
இந்த நிலையில், தற்போது முதல்வரின் கான்வாய் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.இதில், பிஷ்ணுபூர் மாவட்டத்தின் தங்க நாகரம் லெய்காயைச் சேர்ந்த மொய்ரங்தேம் அஜேஷ் (32) என்பவர் வலது தோள்பட்டையின் பின்புறத்தில் குண்டு பாயந்தது. இதனை தொடர்ந்து, அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
Manipur Chief Minister's advanced security attacked by kuki militants, one security person injured.
— chubby cheeks (@San70988629) June 10, 2024
The convoy was traveling from Imphal to Jiribam district when it was attacked on National Highway- 37 at around 10:30 am. #SaveJiribam #Kuki_Hmar_ZoEngineeredManipurViolence pic.twitter.com/YxGD6J2g9m